தமிழ்நாடு

tamil nadu

குழந்தையைக் கடத்திய வடமாநில இளைஞர் கைது

By

Published : Jan 14, 2020, 10:12 PM IST

திண்டுக்கல்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையைக் கடத்திவந்த வடமாநில இளைஞரை திண்டுக்கல் ரயில்வே காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Arrested youth arrested for kidnapping child
Arrested youth arrested for kidnapping child

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் மண்டல் (32). இவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளார். இந்நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்தவர் மஜீனா (21) என்பவர், வேலை தேடி தனது இரண்டு வயது மகள் ரஷிதாவுடன் அதே ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

ரயில் நிலையத்திற்கு வந்த மஜீனா, தனது மகள் ரஷிதாவுடன் உறங்கி கொண்டிருந்தபோது, அங்கு வந்த தீபக் மண்டல் குழந்தையைக் கடத்திக்கொண்டு மும்பை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் குழந்தையுடன் பயணம் செய்துள்ளார். அப்பொழுது குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. இதனால் சந்தேகமடைந்த சகப் பயணிகள் திண்டுக்கல் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குழந்தையைக் கடத்திய வடமாநில இளைஞர் கைது

இதனையடுத்து ரயில் திண்டுக்கல் வந்தபோது ரயில்வே காவல் துறையினர் தீபக் மண்டலையும், கடத்தப்பட்ட குழந்தையையும் மீட்டனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து தீபக் மண்டலிடம் காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசிய தீபக் மண்டல், சென்னையிலிருந்து குழந்தையைக் கடத்திவந்ததாகக் கூறியுள்ளார்.

இதனிடையே குழந்தையைப் பறிகொடுத்த மஜீனா சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அங்குள்ள ரயில்வே காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: முட்புதரில் ஆண் சடலம் - போலீஸ் விசாரணை!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details