தமிழ்நாடு

tamil nadu

பணியில் மெத்தனம்: இரு காவலர்கள் பணியிடை நீக்கம்

By

Published : Apr 23, 2020, 11:13 AM IST

தருமபுரி: ஊரடங்கு உத்தரவின்போது கண்காணிப்புப் பணியில் மெத்தனம் காட்டிய மாரண்ட அள்ளி காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்களை காவல் துறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

two police man fired at work in darumapuri
two police man fired at work in darumapuri

கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய தேவைகள் வாங்குவதற்கு வீட்டை விட்டு மக்கள் வெளியேற மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

மாரண்டஅள்ளி காவல் நிலையம்

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்த காவலர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை கண்டித்து வாகனங்களை பறிமுதல் செய்யாமல் அவர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாகவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், மாரண்ட அள்ளி பகுதியில் அலட்சியமாக பணியாற்றியதாகக் கூறி, காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் கருணாநிதி, தலைமை காவலர் முருகன் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:வேலை பார்க்க சொன்ன உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்

ABOUT THE AUTHOR

...view details