ETV Bharat / bharat

வேலை பார்க்க சொன்ன உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்

author img

By

Published : Apr 22, 2020, 3:18 PM IST

லக்னோ: ஒழுங்காக பணிபுரியுமாறு கூறிய தலைமை உதவி ஆய்வாளரை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கும் காணொலி இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

head-constable-hits-senior-with-baton
head-constable-hits-senior-with-baton

கரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மாவட்ட, மாநில எல்லைகள் உள்பட நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சித்தாபூரில் தலைமை உதவி ஆய்வாளர் ஒருவர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த காவலர் ஒருவரை ஒழுங்காகப் பணிபுரியுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காவலர் தலைமை உதவி ஆய்வாளரை லத்தியால் தாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் நடந்த ஒருசில மணி நேரத்திற்குள்ளாகவே சமூக வலைதளங்களில் வேகமாக இந்த வீடியோ பரவத் தொடங்கியது.

உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தலைமை உதவி ஆய்வாளர் ரமேஷ் சவுகான், காவலர் ராமஷ்ரேவை பணி நேரத்தில் திட்டியுள்ளதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ராமேஷ்ரே லத்தியால் தாக்கியதாகவும் கூறினார்.

மேலும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் ஒரு வழக்கும், அரசு ஊழியரைத் தாக்கி காயப்படுத்தியதாக ஒரு வழக்கும் காவலர் மீது பதியப்பட்டுள்ளதாகவும், ரமேஷ் மீது துறை ரீதியான நடவடி்ககை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மீறியர்கள் மீது லத்தி சார்ஜ் செய்த காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.