தமிழ்நாடு

tamil nadu

வீட்டை விற்று ஆன்லைன் ரம்மி, கேரள லாட்டரியில் ரூ.18 லட்சத்தை இழந்தவர் தற்கொலை!

By

Published : Jul 28, 2022, 3:39 PM IST

தற்கொலை
தற்கொலை

அரூர் அருகே முத்தானூர் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி மற்றும் கேரள லாட்டரியில் ரூ.18 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததோடு வீட்டை விற்ற பணத்தையும் ரம்மி விளையாட்டில் இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

தர்மபுரி: ஆன்லைன் கேம் மற்றும் கேரள லாட்டரியில் ரூ.18 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்த விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே முத்தானூர் கிராமத்தைச்சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன்ரம்மி விளையாட்டில் இவர், சுமார் ரூ.15 லட்சத்திற்கும் மேல் பணம் இழந்துள்ளதாகவும், அதே போல் கேரள லாட்டரியில் ரூ.3 லட்சத்திற்கும் மேல் இழந்துள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்த பிரபு அவருடைய வீட்டில் நேற்று (ஜூலை27) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் உயிரிழந்த பிரபுவுக்கு மனைவி மற்றும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆன்லைன் விளையாட்டிற்காக இவர் தனது சொந்த வீட்டையே விற்க முயற்சித்து அதில் பெற்ற முன்தொகையைக் கொண்டு ரம்மி விளையாடி ஏமாற்றம் அடைந்த விரக்தியில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒருவர் தற்கொலை

இந்நிலையில் இதுதொடர்பாக, அரூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். அரூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் கேரள லாட்டரிச்சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, விற்பனை செய்த ஏழு நபர்களைக்கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லாட்டரிச்சீட்டு விற்கும் கும்பல்கள் அரூர் பகுதியில் டீக்கடை, நான்கு ரோடு மற்றும் செல்போன் விற்பனை நிலையங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மறைந்திருந்து லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்வதால் சிலர் லாட்டரிச்சீட்டுக்கு அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாமல் தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

இதையும் படிங்க: ஒருத்தன ஏமாத்தனும்னா.. அவனோட ஆசைய தூண்டனும்.. ஆன்லைன் சூதாட்டத்தின் பின்புலம் என்ன?!

ABOUT THE AUTHOR

...view details