தமிழ்நாடு

tamil nadu

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

By

Published : Jul 25, 2021, 10:10 AM IST

கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 36ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

dharmapuri  ஒகேனக்கல் காவிரி ஆறு  ஒகேனக்கல்  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு  hoganakkal Cauvery River  dharmapuri hoganakkal Cauvery River  Increase in water level in the hoganakkal Cauvery River  Increase in water level  நீர்வரத்து அதிகரிப்பு  தர்மபுரி செய்திகள்  dharmapuri news  dharmapuri latest news
ஒகேனக்கல்

தர்மபுரி:தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடகா, தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் தமிழ்நாடு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஆர்ப்பரித்து கொட்டும் நீர்

நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, ஐவர் பவனி பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை செல்லும் நீரின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம்- குடிபோதை காரணமா?

ABOUT THE AUTHOR

...view details