தமிழ்நாடு

tamil nadu

வரதட்சணை கொடுமையில் பெண் உயிரிழப்பு!

By

Published : Jun 15, 2019, 9:11 AM IST

தருமபுரி: வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண்னை, கணவர் குடும்பத்தினர் கொலை செய்ததாகக் கூறி பெண் வீட்டார் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர்.

வரதட்சணை கொடுமையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வேடிக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் மகள் லலிதா(28) இவருக்கும் பாப்பாரப்பட்டி அடுத்த கானபட்டி சின்னன் மகன் சுப்பிரமணிக்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு சௌந்தர்யா என்ற ஆறு வயது மகளும், பிரசாந்த் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர்.

சுப்பிரமணி

பைனான்ஸ் தொழில் செய்து வரும் சுப்பிரமணி, அவர் பெற்றோருடன் சேர்ந்து லலிதாவை வரதட்சணை கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. லலிதாவின் பெற்றோர் சுப்பிரமணியம் கேட்டதிற்கும் அதிகமாகவே பணம், நகைகளை கொடுத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று லலிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக பெங்களூருவில் உள்ள லலிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நேரில் வந்து லலிதாவைப் பார்த்தபோது அவர் உடலில் பல இடங்களில் காயம் இருந்திருக்கிறது.

அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை, இவர்கள்தான் லலிதாவை கொலை செய்துள்ளனர் என்று கருதி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் லலிதா பெற்றோர் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகார் அளித்தும் சுப்பிரமணி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காவலர்கள் மெத்தனம் காட்டி வந்துள்ளனர், இதனால் மருத்துவனையில் லலிதாவின் உடலை வாங்காமல் அவர் குடும்பத்தினர் காவலர்களை முற்றிகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதன் பின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

வரதட்சணை கொடுமையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details