தமிழ்நாடு

tamil nadu

தருமபுரி எம்பி செந்தில்குமார் பங்கேற்ற கூட்டம்: வீடியோ கேம் விளையாட்டு, தூங்கி வழிந்த அதிகாரிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 7:49 PM IST

Dharmapuri mp senthilkumar: தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் செலவினங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் அரசு அதிகாரிகள் அலட்சியமாக செல்போனில் சமூக வலைதளங்களை பார்த்துக்கொண்டும், அக்கறையின்றி தூங்கி வழிந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

அரசு ஆலோசனை கூட்டத்தில் செல்போனில் கேம் விளையாடியும் தூங்கியும் விழுந்த அரசு அதிகாரிகள்

தருமபுரி: தருமபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் குழுத்தலைவர் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் தலைமையில் இன்று (ஆக.29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றபோது செல்போனில் கேம் விளையாடியும் தூங்கித் தூங்கி விழுந்த அரசு துறை அதிகாரிகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினர் செயலாளரும் மாவட்ட ஆட்சிருமான சாந்தி முன்னிலை வகித்தார்.

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை சர்ச்சை.. இந்து அறநிலையத் துறை அலுவலகத்தை முற்றுகையிடக் காரணம் என்ன?

தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுகளின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி, மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்களுக்கான வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டு, அத்தகைய திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் முழுமையாக நிறைவேற்றிட வேண்டும் எனவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மூன்று மாத்திற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின், அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் அதற்குரிய தீர்வையும் கண்டறிந்து அத்திட்டத்தினை காலதாமதமின்றி விரைவாக நிறைவேற்றுவதற்கு ஏதுவாக இக்கூட்டம் இருக்கும். துறை அலுவலர்கள் அரசின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் குழுத்தலைவர் மற்றும் ஆட்சியர் அரசு அலுவலர்களுடன் விவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:கட்சி கொள்கைக்கு சங்கடம் ஏற்படுத்திடாத வகையில் மேயர் செயல்பட வேண்டும் - கும்பகோணம் துணை மேயர் அறிவுரை

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் பலரும் தங்களது செல்போனில் கேம் விளையாடிக்கொண்டும், வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும், சினிமா உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்சிகளை கண்டும் ரசித்து கொண்டிருந்தனர். ஒரு சிலர் உண்ட மயக்கத்தில் அசந்து தூங்கி கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் தீபனாவிஸ்வேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாட்டையை சுழற்றும் நீதிமன்றம், சிக்கலில் அமைச்சர்கள்! நீதிமன்ற வாசலுக்கு படையெடுக்கும் அவலம்!

ABOUT THE AUTHOR

...view details