தமிழ்நாடு

tamil nadu

தீபாவளி விற்பனை: ஒரேநாளில் இரண்டு கோடிக்கு ஆடுகள் விற்பனை!

By

Published : Nov 10, 2020, 1:38 PM IST

தீபாவளியை முன்னிட்டு தருமபுரி நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆட்டுச் சந்தையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆடுகள் விற்பனை
ஆடுகள் விற்பனை

தருமபுரி: நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் இன்று(நவ.10) மாவட்டத்தின் பல பகுதியிலிருந்து விவசாயிகள் தங்கள் வளர்த்து வந்த ஆடுகளை தீபாவளி பண்டிகை செலவுக்காக விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர் பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, கர்நாடகா மாநிலத்தின் தும்கூர் பகுதி, ஆந்திர மாநிலம் போன்ற இடங்களிலிருந்து சுமார் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

ஆடுகள் விற்பனை

ஆடுகளை வாங்க இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் சந்தையில் குவிந்தனர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளின் விலை ரூ.500 முதல் 1,000 ரூபாய்வரை உயர்ந்து விற்பனை ஆனது. தீபாவளி பண்டிகையை கொண்டாட கிராமப்புறத்தைச் சார்ந்த ஏராளமானோர் ஆடுகளை வாங்கி சென்றனர்.

சந்தையில் ஒரு ஆடு 7,500 ரூபாய் முதல் 30,000 ரூபாய்வரை விற்பனையானது. 23 கிலோ எடையுள்ள ஆடு 26 ஆயிரம் ரூபாய்க்கும் 14 கிலோ எடை கொண்ட ஆடு 16 ஆயிரம் ரூபாய்வரையும் விற்பனையானது.

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் இன்று(நவ.10) மட்டும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை ஆனது, காரிமங்கலம் வார சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. காரிமங்கலம், நல்லம்பள்ளி வார சந்தையில் இன்று(நவ.10) மட்டும் மொத்தம் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை நடைபெற்று உள்ளது.

இதையும் படிங்க: பட்டாசு புகையால் கரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details