ETV Bharat / bharat

பட்டாசு புகையால் கரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை

author img

By

Published : Nov 10, 2020, 9:07 AM IST

வழக்கத்தை விட, பட்டாசு புகையால் கரோனா தொற்று வேகமாகப் பரவும் வாய்ப்பு அதிகமுள்ளதாகவும், நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

cracker smoke
cracker smoke

ஹைதராபாத்: கரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் இந்த தீபாவளி பண்டிகையின் போது, வழக்கத்தை விட அதிகமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், பட்டாசு புகை மாசுகளுடன், கரோனா வைரஸ் தொற்று பரவி, நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நாள்பட்ட நோயாளிகள் மற்றும் சுவாசப் பிரச்னைகள் உள்ளவர்கள் பட்டாசு புகைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பட்டாசு புகைகளுடன் கரோனா வைரஸ் உடலுக்குள் உட்புகும்போது பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால் தான், டெல்லி உட்பட பல மாநிலங்களில், பட்டாசு விற்பனைத் தடை செய்யப்பட்டுள்ளது.

பரவலுக்கு அதிக சாதகம்:

பொதுவாக, காற்று மாசுபாடுகள் வழக்கத்தைவிட, தீபாவளிக்குப் பிந்தைய நாட்களில் அதிகமாக இருக்கும். இதனால், அதிமான சுகாதாரப் பிரச்னைகள் உருவாகின்றன. இந்தப் பண்டிகை காலங்களில், ஏற்கெனவே கரோனாவிலிருந்து மீண்டவர்கள் மீண்டும் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாகவும், குளிர் கால மாசுபாடு, தொற்று பாதிப்பு இல்லாதவர்களையும் அதிகம் பாதிக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இத்தாலியின் ஆய்வுகள்:

இத்தாலியில், கரோனாவின் முதல் இடைவெளியில் அதிகமான மக்கள் இறந்தனர். மத்திய, தென் இத்தாலி பகுதிகளை விட, மாசு அதிகமாக இருக்கும் வட இத்தாலியில், இறப்பு எண்ணிக்கை அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலும், இது குறித்து பெரிய அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கள்அடர்த்தி மிக அதிகமாக உள்ள நியூயார்க் நகரில் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. கரோனா தொடர்பான இறப்புகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், காற்றில் ஆபத்தான தூசித் துகள்கள் (Suspended Particulate Matter – SPM-2.5) நானோ கன மீட்டருக்கு, ஒரு மைக்ரோ கிராம் உயரும். ஒவ்வொரு நிமிடத்திற்கும், இறப்பு விகிதம் 8 விழுக்காடு அதிகரிக்கிறது. இதேபோல், காற்றின் தரம் மிகக் குறைந்த இடங்களில், கோவிட் இறப்புகள் அதிகரித்திருக்கின்றன. பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலும், மாசு காரணமாக கோவிட்டின் தீவிரம் அதிகரித்து வருகிறது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மாசு வெளிப்பாடு காரணமாக, மூக்கில் உள்ள மாசுபாட்டைக்கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படுகிறது. இதனால், மாசு நேரடியாக இரத்த நாளங்களுக்குள் சென்று வீக்கம் ஏற்படுத்துகிறது. இதனுடன் கோவிட் தொற்றும் சேர்ந்தால், ஆபத்து மேலும் அதிகமாகி மரணத்திற்கு வழிவகுக்கிறது.

கடந்த ஆண்டின் தீவிரம்:

இந்தியாவில், தீபாவளிக்கு முன்னும் பின்னும் மாசுபாட்டின் தீவிரம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பட்டாசுகள் வெடித்த பிறகு, தூசித் துகள்கள் (PM) 30-40 மடங்கு அதிகரிப்பது அடையாளம் காணப்பட்டது. தீபாவளி விழாவிற்கு முன்பே டெல்லியில் கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடுமையான காற்று மாசுபாடு இதற்கு முக்கியக் காரணம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மத்திய மாசு கட்டுப்பாட்டு கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ள தரத்தின்படி, AQI (காற்றின் தர அட்டவணை) 0 - 50 க்கு இடையில் இருந்தால், அது 'தூய காற்று' என்று கருதப்படுகிறது. இது 51-100க்கு இடையில் இருந்தால், அது 'திருப்திகரமாக' கருதப்படும், அதுவே 101-200க்கு இடையில் இருந்தால் 'சராசரி' என்றும், 201-300க்கு இடையில் இருந்தால், அது 'திருப்தியற்றது' என்றும், 301-400ஆக இருந்தால் , இது 'திருப்திகரமாக இல்லை' என்றும் கருதப்படும். இறுதியாக, இது 401-500 க்கு இடையில் இருந்தால், அது 'கடுமையான விளைவை’ ஏற்படுத்தும் என்றும் அர்த்தம்.

இப்போது, ​​கோவிட் பரவும் இந்தச் சூழலில், பட்டாசு வெடிப்பதால் உண்டாகும் மாசுபாட்டால், ஒவ்வொரு நிமிடத்திற்கும் தூசித் துகள்கள் அதிகரித்து, காற்றின் தரம் குறையும் என்ற கவலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பட்டாசு வெடிப்பது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறும்.

இதையும் படிங்க: கரோனாவை விட ஜனநாயக கடமையே பெருசு - பிகாரில் வாக்குப்பதிவு சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.