தமிழ்நாடு

tamil nadu

அரசு பள்ளி மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட தருமபுரி எம்.எல்.ஏ!

By

Published : Dec 16, 2022, 6:09 PM IST

தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அரசுப் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சத்துணவு சாப்பிட்டார்.

Etv Bharat
Etv Bharat

அரசு பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு அருந்திய எம்எல்ஏ

தருமபுரி: நல்லம்பள்ளி அருகே உள்ள பங்குநத்தம் கொட்டாய் பகுதியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்குச் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் ஒதுக்கீடு செய்து, அதற்காக அடிக்கல் நாட்டுவதற்காக தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அப்பள்ளிக்கு சென்றிருந்தார்.

பள்ளிக்கு சென்று சுற்றுச்சுவர் அமைக்க அடிக்கல் நாட்டிய பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளிக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது மதிய நேரம் என்பதால் பள்ளி மாணவர்கள் அனைவரும் உணவு அருந்தச் சென்றனர்.

சட்டப்பேரவை உறுப்பினரும் மாணவர்களோடு சேர்ந்து நின்று உணவினை பெற்றுக்கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது மாணவிகளிடம் தினந்தோறும் பள்ளியில் தரமான உணவு வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்காக சுவையான உணவு தயார் செய்த சமையலருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலக்கியம்பட்டி பகுதியில் ஆய்வுக்கு சென்ற எம்.எல்.ஏ எஸ்.பி வெங்கடேஸ்வரன் அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘பொறியியல் படித்தால் குடியரசுத் தலைவர் ஆகலாம்’ - அமைச்சர் பொன்முடி

ABOUT THE AUTHOR

...view details