ETV Bharat / state

‘பொறியியல் படித்தால் குடியரசுத் தலைவர் ஆகலாம்’ - அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Dec 16, 2022, 5:24 PM IST

நாட்டிலேயே தமிழகத்தை விளையாட்டின் சிறந்த மாநிலமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுவார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

க. பொன்முடி
க.பொன்முடி

கிண்டி (சென்னை): இந்திய பொறியியல் கல்லூரிகள் மற்றும் இந்திய பொறியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் மாணவர்களின் திறனை அதிகப்படுத்தியத்தில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம் பெற்று இருக்கிறது” என தெரிவித்தார்.

1964-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 6 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 504 பொறியியல் கல்லூரிகள் உள்ளது். தமிழகத்தில் தான் அதிகளவில் மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கின்றனர். பொறியியலில் 3 பிரிவுகள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 15 துறைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

தற்போது உள்ள வளர்ச்சியின் படி தமிழக பாட திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் இருப்பதாகவும், கிராமப்புற மாணவர்களுக்காக, பொறியியல் நுழைவுத் தேர்வை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ரத்து செய்ததாக தெரிவித்தார்.

பொறியியல் படித்தவர்கள் குடியரசுத் தலைவராகவே வர முடியும் என்பதற்கு உதாரணம் டாக்டர் அப்துல் கலாம் என்றும் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் இளைஞர்களுக்கான வளர்ச்சி இருக்க வேண்டும் என்றார். இந்தியாவிலேயே ஆங்கிலம் சிறப்பாக பேசும் மாநிலம் தமிழகம் தான் என்றும் அதற்கு காரணம் தமிழகம் கடை பிடித்துள்ள இரு மொழி-+ கொள்கை என்று அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "இந்திய பொறியியல் காங்கிரஸின் 37ஆவது மாநாடு தொடக்க விழா, அகில இந்திய அளவில் தமிழகத்தில் தொடங்கப்பட்டு 100ஆவது ஆண்டு விழாவாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு மைதானம் அமைக்க ஏற்பாடு செய்வோம் என்று தெரிவித்துள்ளதாகவும், பள்ளியில் படிக்கும் போதே விளையாட்டு ஆர்வம் இருந்தால் தான் வளரும்போதும் ஆர்வம் இளைஞர்களிடம் இருக்கும் என்ற அடிப்படையில் முதலைமைச்சர் அந்த பொறுப்பை உதயநிதிக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு

விளையாட்டுத் துறையாக இருந்தாலும், இளைஞர்களின் வளர்ச்சி மேம்பாட்டு திறனாக இருந்தாலும், அது பள்ளி, கல்லூரியுடன் தொடர்புடையது தான் என்றும் அதனை உதயநிதி சிறப்பாக செய்வார் என கூறினார்.

எப்படி உலக அளவில் இருந்த சதுரங்க போட்டிகளை நடத்த விளையாட்டு துறை அமைச்சர் செயல்பட்டாரோ, அதுபோல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை விளையாட்டில் சிறந்த நகரமாக மாற்ற உதயநிதி செயல்படுவார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: TNPSC Annual planner: இவ்வளவு தான் வேலையா? குரூப்-1, குரூப்-2 எங்கே? கொதித்தெழுந்த இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.