தமிழ்நாடு

tamil nadu

சுடுகாட்டில் வசிக்கும் ஏழை இஸ்லாமியர் குடும்பம் : இலவச வீட்டுமனை பெற்று தர உறுதி அளித்த தருமபுரி எம்பி

By

Published : Apr 20, 2022, 11:03 AM IST

பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டில் வசிக்கும் ஏழை இஸ்லாமியர் குடும்பத்தினர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த தருமபுரி எம்பி செந்தில்குமார் அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Dharmapuri MP assures poor Islamist family living in Cemetery to get free house and other helps இலவச வீட்டுமனை பெற்று தர உறுதி அளித்த - தருமபுரி எம்பி  சுடுகாட்டில் வசிக்கும் ஏழை இஸ்லாமியர் குடும்பம் : இலவச வீட்டுமனை பெற்று தர உறுதி தருமபுரி எம்பி பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டில் வசிக்கும் ஏழை இஸ்லாமியர் குடும்பத்தினர்
இலவச வீட்டுமனை பெற்று தர உறுதி அளித்த - தருமபுரி எம்பி சுடுகாட்டில் வசிக்கும் ஏழை இஸ்லாமியர் குடும்பம் : இலவச வீட்டுமனை பெற்று தர உறுதி தருமபுரி எம்பி பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டில் வசிக்கும் ஏழை இஸ்லாமியர் குடும்பத்தினர்

தருமபுரி:மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இம்ரான் தாஜூன் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் வசித்து வருகின்றனர். இந்த சுடுகாட்டில் இஸ்லாமியர்களை அடக்கம் செய்யும் பணிகளைச் செய்து, அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகிறார்.

இவர்களின் இளைய மகள் ரஜ்ஜியாவின் கணவன் ரபீக் உயிரிழந்த நிலையில் அவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். மேலும் வீடு பழுதான நிலையில் சிறிய வீட்டிலேயே 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தினருக்கு போதிய இட வசதியும், வருமானமும் இல்லாமல் தவித்து வந்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டில் வசிக்கும் ஏழை இஸ்லாமியர் குடும்பத்தினர்

அதனை அறிந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் சுடுகாட்டில் வாழும் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார். அப்பொழுது இம்ரன் மற்றும் மகள் ரஜ்ஜியாவின் நிலை குறித்துக் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசு உதவித் தொகை வழங்குவதற்கும், இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டியில் சுடுகாட்டில் வசிக்கும் ஏழை இஸ்லாமியர் குடும்பத்தினர்

அதனை தொடர்ந்து ரஜ்ஜியாவிற்கு வருமானத்திற்காக வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக இம்ரான் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனால் இம்ரான் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளுக்கு பணம் மீதுதான் அக்கறையா? மக்களின் உயிர் மீது இல்லையா? - செந்தில்குமார் எம்பி

ABOUT THE AUTHOR

...view details