தமிழ்நாடு

tamil nadu

பேய் பயம்: ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!

By

Published : Nov 16, 2021, 5:17 PM IST

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

கடலூரில் ஆயுதப்படை காவலர் ஒருவர் பேய்க்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்: கள்ளக்குறிச்சியின் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (33). கடலூர் ஆயுதப்படையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஷ்ணுப்பிரியா என்பவருடன் திருமணமாகி தலா ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.

பிரபாகரன் தனது குடும்பத்துடன் கடலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

தற்கொலை தீர்வல்ல

வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில் நேற்று (நவ.16) மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஷ்ணுபிரியா மற்றும் அவரது குழந்தைகள் ஆகியோர் சென்றுள்ளனர். வீட்டில் பிரபாகரன் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

பின்னர் சுப நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஷ்ணுபிரியா மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது பிரபாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரபாகரனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரபாகரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த கடலூர் புதுநகர் காவல்துறையினர் பிரபாகரன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

பேய்க்கு அஞ்சிய பிரபாகரன்

இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. தொடர் சிகிச்சை எடுத்தும் குணமடையாததால், தனக்கு பேய் பிடித்திருக்கலாம் எனப் பிரபாகரன் நினைத்துள்ளார்.

அதற்காக மாந்திரீகர் ஒருவரை அணுகிய பின்னர், 15 நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் உள்ள பூஜை அறையிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய நிலையிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

காவலர் குடியிருப்பில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு உயிரிழந்த பெண் ஒருவர், பேயாக வந்து தனக்கு மரண பயத்தைக் காட்டிவிட்டதாகவும் அவர் கூறி வந்துள்ளார். இது தொடர்பாக கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பணியிடத்தில் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் பழகும் பிரபாகரனின் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல, பேய் குறித்த பயம் மட்டுமே காரணம் எனக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பேய் பயத்தால் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:முன்விரோதம்: மொபட்டில் சென்ற சிறுவனுக்கு அரிவாள் வெட்டு - இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details