தமிழ்நாடு

tamil nadu

ஓடும் ரயிலில் திடீர் உடல்நலக்குறைவு..கடலூரில் சிகிச்சையில் அமைச்சர் மெய்யநாதன்..

By

Published : Oct 1, 2022, 9:49 AM IST

Etv Bharat

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ரயில் பயணத்தின்போது, ரத்த அழுத்த காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர்: ரயில் பயணத்தின்போது, ரத்த அழுத்தம் காரணமாக திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் மெய்யநாதன் நேற்று (செப்.30) இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறியுள்ளார். குளிரூட்டப்பட்ட முன்பதிவு பெட்டியில் பயணித்த அவருக்கு நள்ளிரவு 2 மணி அளவில் சிதம்பரம் அருகே ரத்த அழுத்தம் காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

தனக்கு திடீரென உடல் வியர்ப்பதாக, தன்னுடைய உதவியாளரிடம் கூறியதைத் தொடர்ந்து அவர் உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு அமைச்சருக்கு உடல் நலம் சரியில்லாதது குறித்து தெரிவித்தார். இதையடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும், அங்கிருந்த ரயில்வே போலீசார் அமைச்சர் மெய்யநாதனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திகணேசன், மருத்துவமனையில் அமைச்சரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அமைச்சரின் குடும்பத்தினர் சிதம்பரம் மருத்துவமனைக்கு வந்தவுடன் அமைச்சர் பரிசோதனைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்படுவார் என தெரிய வருகிறது.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்காக எத்தனை கோடி செலவழித்தீர்கள் என்பதை ஆதாரத்துடன் சொல்ல முடியும் - அமைச்சர் மூர்த்தி

ABOUT THE AUTHOR

...view details