தமிழ்நாடு

tamil nadu

அரசு பள்ளியில் சேர்ந்தால் ரூ.2000 வழங்கப்படும் - மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புது வியூகம்

By

Published : Aug 22, 2020, 4:58 PM IST

கடலூர்: அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க 6ஆம் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்படுகிறது.

அரசு பள்ளியில் சேர்ந்தால் இரண்டாயிரம் ரூபாய்
அரசு பள்ளியில் சேர்ந்தால் இரண்டாயிரம் ரூபாய்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 365 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு 6ஆம் வகுப்பில் 10 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால் அப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று அப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரம்

இதனால் அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க புதிய வியூகத்தை கையாண்டுள்ளனர். அதாவது, பள்ளியில் 6ஆம் வகுப்பு சேரும் மாணவர்கள் அனைவருக்கும் ரூ.2000 வழங்கப்படும் என துண்டு பிரசுரம் அச்சடித்து, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநியோகம் செய்துவருகின்றனர்.

இது அப்பகுதி மக்களிடையே நன்கு வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அந்த துண்டு பிரசுரம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:கண்ணாடிக்கு பின் இருந்த ரகசிய அறை - விடுதியில் பாலியல் தொழில் நடத்திய மூவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details