தமிழ்நாடு

tamil nadu

அரசுப் பேருந்துமீது இருசக்கர வாகனம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

By

Published : Oct 28, 2019, 7:42 AM IST

கடலூர்: விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்து மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், அதில் வந்த இரு இளைஞர்களும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

accident 2 deaths

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள வி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி, பிரம்மன் ஆகிய இருவரும் திருப்பூரில் வேலை செய்து வந்தார்கள். தீபாவளிக்காக ஊருக்கு வந்த அவர்கள், தங்கள் நண்பரை விருத்தாசலத்திலிருந்து அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அப்போது கார்குடல் கிராமம் அருகே வரும்போது சாலையிருந்த பள்ளத்தில் இறங்கிய இருசக்கர வாகனம், தடுமாறி விருத்தாசலத்திலிருந்து சிறுவரப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் இரண்டு இளைஞர்களும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து, விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்த இளைஞர்களின் உடல்களும் ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. தீபாவளியைக் கொண்டாட வந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் இறந்ததால் அப்பகுதி மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இதையும் படிங்க:
இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆணை

Intro:விருத்தாசலம் அருகே இருசக்கர வாகனம் அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
Body:கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள வி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் பசுபதி மற்றும் தட்சிணாமூர்த்தியின் என்பவரின் மகன் பிரம்மன் ஆகிய இருவரும் திருப்பூரில் வேலை செய்து வந்தவர்கள்.தீபாவளிக்காக ஊருக்கு வந்த அவர்கள் இன்று தங்களுடைய நண்பரை விருத்தாசலத்தில் இருந்து அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் வீ.குமாரமங்கலத்தி லிருந்து விருத்தாசலம் நோக்கி வந்துள்ளனர். அப்போது கார்குடல் கிராமம் அருகே வரும் போது சாலையிருந்த பள்ளத்தில் இறங்கிய இருசக்கர வாகனம் தடுமாறி எதிர்பாராத விதமாக விருத்தாசலத்தில் இருந்து சிறுவரப்பூர் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் 2 இளைஞர்களும் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து, விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் ,விபத்தில் இறந்த இரண்டு இளைஞர்களின் உடல்களை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது .தீபாவளிக்கு தீபாவளியை கொண்டாட வந்த இரண்டு இளைஞர்கள் விபத்தில் இறந்ததின்காரணமாக அவர்களின் உறவினர்களும் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details