தமிழ்நாடு

tamil nadu

ஓணம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய இளைஞர்களின் கார் விபத்து - மூவர் சடலமாக மீட்பு

By

Published : Sep 9, 2022, 9:57 PM IST

கோயம்புத்தூரில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு காரில் வீடு திரும்பிய இளைஞர்களின் கார் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.

Etv Bharat நீரில் மூழ்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
Etv Bharat நீரில் மூழ்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கோயம்புத்தூர்:வடவள்ளி பகுதியைச்சேர்ந்த ரோஷன் (18) என்பவர் தனது நண்பர்களுடன் நேற்று (செப். 08) சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று (செப்.09) அதிகாலை காரில் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, தென்னமநல்லூர் பகுதியில் வளைவில் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார் 120அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்தது.

முன்னதாக இதில், காரை ஓட்டி வந்த ரோஷன் கதவைத் திறந்து வெளியே விழுந்து விட, உடன் வந்த நண்பர்கள் ஆதர்ஷ் (18), ரவி (18), நந்தனன் (18) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள்.

நீரில் மூழ்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச்சென்ற காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில் பைக் விபத்தில் மணமகன் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details