தமிழ்நாடு

tamil nadu

குடியிருப்பு அருகே கல்குவாரி; உயிரைக் காப்பாற்ற மக்கள் போராட்டம்

By

Published : Dec 19, 2022, 9:38 PM IST

குடியிருப்புப் பகுதிக்கு அருகே இயங்கும் கல்குவாரியில் வெடி வைக்கும் போது பாறைகள் வீடுகளில் வந்து விழுவதால் மக்கள் அடிக்கடி காயமடைகின்றனர். இதனால் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்பு அருகே கல்குவாரி; உயிரைக் காப்பாற்ற மக்கள் போராட்டம்
குடியிருப்பு அருகே கல்குவாரி; உயிரைக் காப்பாற்ற மக்கள் போராட்டம்

குடியிருப்பு அருகே கல்குவாரி; உயிரைக் காப்பாற்ற மக்கள் போராட்டம்

கோவை: கிணத்துக்கடவு அடுத்துள்ள சொக்கனூர் கிராமத்துக்கு அருகில் பொட்டையாண்டி புறம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் திமுக பிரமுகர் ரஞ்சித் குமார் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த குவாரியில் சமீபகாலமாக வெடிவைக்கும் பொழுது அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளின் உள்ள வீடுகள், விவசாய நிலங்களில் பாறைகள் விழுந்து பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் பாறைக்கு வெடி வைக்கும் பொழுது உண்டாகும் அதிர்வினால் அதன் அருகில் உள்ள அரசு ஆள்துளைக் கிணற்றில் உள்ள நீரும் தற்சமயம் குறைந்து வருகிறது. இந்த ஆழ்துளை கிணறு தான் சொக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும் வருவாய்த்துறையினருக்கும் தொடர்ந்து இப்பகுதி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த கல்குவாரி திமுக பிரமுகருக்குச் சொந்தமானது என்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என மக்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:"திமுகவுக்கு தைரியமிருந்தால் தொட்டுப்பாருங்க" - நாராயணன் திருப்பதி சவால்!

ABOUT THE AUTHOR

...view details