தமிழ்நாடு

tamil nadu

நவரச நாயகி விருது பெற்ற பத்மஸ்ரீ திருநங்கை!

By

Published : Oct 11, 2019, 5:01 PM IST

'சமூகம் வேறு, நாம் வேறு இல்லை என்றும்; திருநங்கைகள் இந்த சமூகத்தை ஒரு குடும்பமாக நினைத்து பொதுக் கட்டுப்பாடுகளுடன் செயல்படவேண்டும்’ எனவும் திருநங்கை நர்த்தகி நடராஜ் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழிசைச் சங்கத்தின் 34ஆம்ஆண்டு நாட்டியப் பெருவிழா நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் இசை நாடகக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு நவரச நாயகி விருது வழங்கப்பட்டது. இதில், மேற்கு மண்டல ஐஜி கலந்துகொண்டு விருதினை நர்த்ததி நடராஜனுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் திருநங்கைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நர்த்தகி நடராஜனிடம், திருநங்கைகள் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏன் என்ற கேள்வியுடன் பேட்டியை தொடங்கினர்.

இதற்குப் பதில் அளித்த நர்த்தகி நடராஜன், 'திருநங்கைகள் விநோதமான உலகத்திலிருந்து வந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தை உடைத்து எறிந்து விட்டார்கள். சமூகத்தில் ஏன் திருநங்கைகள் இப்படி நடந்து கொள்கிறார்கள். மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் வாழ்கிறார்கள் எனக் கேட்க முடியாத அளவிற்கு பெரும்பான்மையானவர்கள் சுயமரியாதையுடன் திறமையுடன் சொந்த முயற்சியால் வளர்ந்து வருகிறார்கள்.

திருநங்கை நர்த்தகி நடராஜூக்கு நவரச நாயகி விருது

சமூகம் வேறு, நாம் வேறு இல்லை. இந்த உலகில் திருநங்கைகள் வாழ்வதையும், போராடுவதையும் இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளவேண்டும். திருநங்கைகளும் காலத்தின் ஓட்டத்தை புரிந்துகொள்வார்கள். சமூகத்திற்கு சில ஒழுக்க நெறிகள் உள்ளது. திருநங்கைகளும் வானத்தில் இருந்து குதிக்கவில்லை. குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான். எனவே சமூகத்தை ஒரு குடும்பமாக நினைக்க வேண்டும்.

இழிவான நிலைகளில் வாழ்கிறோம் என்பதை வெறுக்க வேண்டும். எந்தத் துன்பம் வந்தாலும், பசித்தாலும் தன்மானத்தை இழக்கக்கூடாது' என மன உருக்கத்துடன் பதிலுரைத்தார்.

இதையும் படிங்க:

சீன அதிபரை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!

Intro:tamileasi sangamBody:tamileasi sangamConclusion:திருநங்கைகள் சமூகத்தை குடும்பமாக நினைத்து பொது கட்டுப்பாடுகளுடன் செயல்படவேண்டும் திருநங்கை பத்மஸ்ரீ தமிழ் இசை நடன கலைஞர் நர்த்தகி நடராஜ் வேண்டுகோள்
பொள்ளாச்சி : அக்.11
பொள்ளாச்சியில் தமிழிசைச் சங்கத்தின் 34ஆம் ஆண்டு நாட்டிய பெருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் தமிழ் இசை நாடகக் கலைஞர் திரு நங்கை நர்த்தகி நடராஜனுக்கு நவரச நாயகி விருது வழங்கப்பட்டது இதில் மேற்கு மண்டல ஐஜி பெரிய கலந்துகொண்டு விருதினை வழங்கினார் நிகழ்ச்சியில் திருநங்கைகள் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது பின்னர் நர்த்தகி நடராஜனிடம் திருநங்கைகள் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது திருநங்கைகள் வினோதமான உலகத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தை உடைத்து எறிந்து விட்டார்கள் சமூகத்தில் ஏன் திருநங்கைகள் இப்படி நடந்து கொள்கிறார்கள் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் வாழ்கிறார்கள் எனக் கேட்க முடியாத அளவிற்கு பெரும்பான்மையானவர்கள் சுயமரியாதையுடன் திறமை சொந்த முயற்சியால் வளர்ந்து வருகிறார்கள் நாடக கலைஞர் ரேவதி காவல்துறை அதிகாரி யாசிகா உள்ளிட்ட பலர் சாதித்துள்ளார்கள் மேலும் பலர் நல்ல ஆளுமைகளாக வருவார்கள் சமூகம் வேறு நாம் வேறு இல்லை இந்த உலகில் வாழ்வதும் போராடுவதும் இந்த சமூகம் நம்மை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக திருநங்கைகள் புரிந்து கொள்ள ேவண்டும் சமூகத்திற்கு சில ஒழுக்கங்கள் கட்டுப்பாடுகள் உள்ளது திருநங்கைகளும் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் எனவே சமூகத்தை ஒரு குடும்பமாக நினைக்க வேண்டும் பொது கட்டுப்பாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் இழிவான நிலைகளில் வாழக் கூடாது என்பதை வெறுக்க வேண்டும் எந்த துன்பம் வந்தாலும் பசித்தாலும் தன்மானத்தை இழக்கக்கூடாது என தெரிவித்த நர்த்தகி நடராஜன் தமிழக அரசின் கலை பண்பாட்டுக் கழகம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது கலைஞர்களின் ஆய்வு திறன் மேலும் வளர்த்துக்கொள்ள கொள்ளவும் வெளியில் வரும் கலைஞர்கள் நிரந்தரமான தொழிலைக் கொண்டு வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த அரசும் தமிழ் இசைச் சங்கம் போன்ற அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details