தமிழ்நாடு

tamil nadu

கோவை மாணவர் லண்டனில் உயிரிழப்பு... இறப்பில் மர்மமா? இங்கிலாந்து போலீஸ் விளக்கம்!

By

Published : Jun 26, 2023, 5:50 PM IST

லண்டன் பர்மிங்காம் கால்வாயில் கோவை மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மாணவர் உயிரிழப்பு சந்தேகத்திற்குரிய மரணம் இல்லை என லண்டன் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Covai Student
Covai Student

லண்டன் :கோவை மாணவர் லண்டன் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேக மரணம் இல்லை என்றும் மாணவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என லண்டன போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவாந்த் சிவகுமார். கோவை கிருஷ்ணா கல்லூரியில் பொறியியல் படித்து முடித்த ஜீவாந்த், கடந்த செப்டம்பர் மாதம் முதல் லண்டன் சென்று படித்து வந்தார். லண்டன் பர்மிங்காம்மில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் MSC international business படித்து வந்த ஜீவாந்த் கடந்த புதன்கிழமை மாலை நண்பர்களிடம் நூலகத்திற்கு செல்வதாக கூறி விட்டு சென்று உள்ளார்.

இரவு வரை அவர் திரும்ப வரவில்லை எனக் கூறப்படும் நிலையில், இரவு உணவுக்காக நண்பர்கள் அவரை தொடர்பு கொண்ட போது நீங்கள் சாப்பிடுங்கள் சிறிது நேரம் கழித்து வருகிறேன் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன் பின் அவரது நண்பர்களால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது,

லண்டன் சில்லி ஓக் பகுதியில் உள்ள பர்மிங்காம் கால்வாயில் கிடந்த ஜீவாந்தை போலீசார் மீட்டு உள்ளனர். சம்பவ இடத்திற்கு மருத்துவக் குழு விரைந்த நிலையில், ஜீவாந்த்தை மீட்டு சிகிச்சை அளித்து உள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே ஜீவாந்த் உயரிழந்ததாக கூறப்படுகிறது.

மாணவர் ஜீவாந்த் உயிரிழப்புக்கான காரணம் குறித்து லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவாந்த் மரணம் சந்தேகப்படும் வகையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் என்ன காரணத்திற்காக அவர் கால்வாய் பகுதிக்கு சென்றார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் உயிரிழப்பு குறித்து அவரது குடும்பத்தினற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், லண்டனில் இருந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஜீவாந்த் உயிரிழப்பு சந்தேகத்திற்குரிய மரணம் என கருதப்படவில்லை என்றும் இறப்புக்கான காரணம் என கண்டறிந்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த மாணவர் ஜீவந்த் சிவகுமாரின் சடலம் சொந்த ஊர் போய் சேர அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என லண்டனில் உள்ள இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "ஜீவந்த் சிவகுமாரின் சோகமான மற்றும் எதிர்பாராத இழப்பை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவர் வாழ்ந்த அழகிய வாழ்க்கையை போற்றவும் நினைவு கூரவும் கனத்த இதயங்களுடன் நாங்கள் ஒன்று கூடுகிறோம்.

அவரது உடல் பாதுகாப்பாக வீட்டிற்கு சென்றடைவதை உறுதி செய்ய அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம். ஜீவந்த் சிவகுமாரை அன்புடனும், கருணையுடனும், நன்றியுடனும் நினைவு கூர்வோம். அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :ஈரானில் தமிழக மீனவர்கள் கைது! எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details