ETV Bharat / state

ஈரானில் தமிழக மீனவர்கள் கைது! எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு!

author img

By

Published : Jun 26, 2023, 4:09 PM IST

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஈரானிய போலீசாரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 5 மீனவர்களை மீட்டுத் தரக் கோரி அவர்களது உறவினர்கள் மாநில அரசை நாடி உள்ளனர்.

Fisherman
Fisherman

திருவனந்தபுரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 3 மீனவர்கள் உள்பட 5 பேரை ஈரான் போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தை சேர்ந்த டென்னிசன், ஸ்டான்லி, திக்சன் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த சஜூ ஜார்ஜ், அரோக்கிய ராஜ் உள்ளிட்டோர் ஐக்கிய அரபு அமீரகம்த்தின் அஜ்மனில் இருந்து மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 5 பேரும் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஈரான் போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

மேலும் ஈரானிய போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட அரேபிய படகின் உரிமையாளர் அப்துல் ரஹ்மானும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஜூன் 18ஆம் தேதி அஜ்மன் நகரை விட்டு மீன் பிடிக்கச் சென்ற நிலையில் எல்லைத் தாண்டியதாக கூறி ஈரான் போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மையில் 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தங்களது உறவினர் ஈரானிய போலீசாரால் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்து அதிர்ச்சிக்குள்ளான குடும்பத்தினர், தங்களது உறவினர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த எந்த தகவலையும் பெறவோ அல்லது அவர்களை தொடர்பு கொள்ளவோ முடியவில்லை என்று கூறினர்.

இதையும் படிங்க : 'இந்தியாவில் என்ன நடக்கிறது' - தாயகம் திரும்பிய பிரதமர் மோடி கேள்வி!

மேலும் ஈரானிய போலீசாரல் கைது செய்யப்பட்ட தங்களது உறவினர்களை மீட்டுத் தரக் கோரி கேரள அரசரிடம் குடும்பத்தினர் மனு அளித்து உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு ஈரானிய போலீசாரால் கைது செய்யப்பட்ட தங்களது உறவினர்களை மீட்டுத் தரக் கோரி அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

முன்னதாக இதேபோன்றதொறு சம்பவம் அண்மையில் நடந்தது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று மீனவர்களை ஈரானிய போலீசார் கைது செய்தனர். போதிய ஆவணங்களின்றி ஈரானிய கடற்பகுதிக்குள் தமிழக மீனவர்கள் நுழைந்ததால் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஈரானிய போலீசாரல் கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்களை மீட்டுத் தரக் கோரி அவர்களது உறவினர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம், தமிழ்நாடு முதலமைச்சர், மற்றும் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டூட்டி டைம் ஓவர்... ஓவர் டைம் பார்க்க விமானி மறுப்பு! 6 மணி நேரம் காத்திருந்த பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.