தமிழ்நாடு

tamil nadu

குழந்தை கடத்தல் - பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

By

Published : Jul 3, 2022, 10:02 PM IST

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தையடுத்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடக்கம்
சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடக்கம்

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி தலைமை அரசு மருத்துவமனையில் இன்று (ஜூலை 03) அதிகாலை பிறந்த நான்கு நாள்களே ஆன குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர். கோவை கண்காணிப்பாளர் பத்திரி நாரயணன் உத்தரவின் பேரில் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் சந்திரா பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடக்கம்

குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு பிறகு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை முகப்பு பகுதி மற்றும் உட்புறப் பகுதிகளில் மூன்று சிசிடிவி கேமராக்கள் தற்பொழுது பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 14 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் உரிய விசாரணைக்கு பிறகு பணியில் அலட்சியம் காட்டிய ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற தனியார் நிறுவன ஊழியர்: சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details