ETV Bharat / state

மனைவியின் தங்கையை காரில் கடத்திச்சென்ற தனியார் நிறுவன ஊழியர்: சிசிடிவி காட்சி

author img

By

Published : Jul 3, 2022, 6:01 PM IST

விழுப்புரத்தில் தங்கையை காரில் கடத்திச்சென்ற கணவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காரில் தொங்கியபடியே சென்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

விழுப்புரம்: சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷிற்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த விஜயபானுவிற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவப் படிப்பு பயிலும் விஜயபானுவின் தங்கையான விஜயமஞ்சுவை வெங்கடேஷ் திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

சிசிடிவி காட்சி

இதற்கு அக்கா விஜயபானு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று மாலை 4 மணியளவில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள பிரபல நகைக் கடைக்கு அக்கா விஜயபானுடன் வந்த தங்கை விஜயமச்சுவை வெகு நேரமாக நோட்டமிட்டு காந்திருந்த வெங்கடேஷ் காரில் ஏற்றுக்கொண்டு கடத்த முயன்றுள்ளார்.

இதனை கண்ட விஜயபானு ஓடிச்சென்று காரின் முன்பக்கம் பேனட்டை கெட்டியாக பிடித்துக்கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கத்தியபடியே தொங்கி சென்றுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் சுதாரித்து காரை மடக்கி பிடித்து வெங்கடேஷுக்கு தர்ம அடி கொடுத்தனர். அதோடு மட்டுமல்லாமல் காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். நான்கு சந்திப்பு அருகே உள்ள விழுப்புரம் மேற்கு காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: Video:'சுத்தத்தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும்': தேனியில் மாஸாக நடந்த சிலம்பம் விழிப்புணர்வு பேரணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.