தமிழ்நாடு

tamil nadu

கோவையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

By

Published : Nov 22, 2022, 12:17 PM IST

Updated : Nov 22, 2022, 12:24 PM IST

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இன்று அதிகாலை நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டுச் சென்றனர்.

கடும் பனிப்பொழிவு
கடும் பனிப்பொழிவு

கோயம்புத்தூர்: வடகிழக்கு பருவமழையால் கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கடும் குளிர் நிலவுகிறது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான நீலாம்பூர், தென்னம்பாளையம், கருமத்தம்பட்டி, கணியூர் ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

கடும் பனிப்பொழிவு

இதன் காரணமாக சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சென்றனர். மேலும் கிராமப்புற சாலைகளிலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க: தஞ்சை பெரியகோவிலில் 1008 சங்காபிஷேகம்

Last Updated :Nov 22, 2022, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details