தமிழ்நாடு

tamil nadu

டிடிஎஃப் வாசன் தான் கடைசி... இனிமேல்... ஜி.பி. முத்துவின் பேட்டி

By

Published : Nov 7, 2022, 7:45 PM IST

இதுவரை தான் யாருடனும் அது போன்ற வேகத்தில் சென்றதில்லை எனவும்; TTF வாசனுடன் சென்ற சம்பவத்திற்குப்பிறகு இனிமேல் யாருடனும் அவ்வாறு செல்ல மாட்டேன் எனவும் ஜி.பி.முத்து கூறினார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து பங்கேற்பு
கோவையில் தனியார் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து பங்கேற்பு

கோவை:தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிக்டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.

திரைத்துறையில் சிறந்த ஒத்துழைப்பு இருக்கிறது. பிக்பாஸ் அனுபவம் சிறப்பாக இருந்தது. பிக்பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிகப்பெரும் பாக்கியம். தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிக்பாஸை விட்டு வெளியேறினேன். தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன்.

நடிகை சன்னி லியோனுடன் ஒரு திரைப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ என்று கூறியவுடன் அவர் தன்னை பார்த்து கியூட் எனக்கூறியபோது சிலிர்த்துப்போனது’ என்றார்.

கோவையில் தனியார் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து பங்கேற்பு

கோவையில் யூ-ட்யூபர் டிடிஎஃப் வாசனுடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 'இதுவரை தான் யாருடனும் அது போன்ற வேகத்தில் சென்றதில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் அவ்வாறு செல்லமாட்டேன்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க:14 புதிய துணை மின் நிலையங்களைத்திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details