ETV Bharat / state

14 புதிய துணை மின் நிலையங்களைத்திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

author img

By

Published : Nov 7, 2022, 4:04 PM IST

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

foundation
foundation

சென்னை: எரிசக்தித்துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில், 373 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு உள்ளிட்டப் பல்வேறு இடங்களில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 14 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

அதேபோல், 91 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் 57 துணை மின் நிலையங்களில், 723 எம்.வி.ஏ அளவிற்கு உயர்த்தப்பட்ட மின் மாற்றிகளின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார். மேலும், 130 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய 110 கி.வோ துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு, எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு' - EWS 10% இட ஒதுக்கீடு தீர்ப்புக்கு முதல்வர் கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.