தமிழ்நாடு

tamil nadu

கோவையில் 108 பெட்டிக் கடைகளில் இருந்து 87 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 25, 2023, 8:24 AM IST

Gutka seized from shops in coimbatore: கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 87 கிலோ புகையிலைகள் 108 பெட்டிக் கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி முழுவதும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையும் இணைந்து, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு, 23 சிறப்பு தனிக்குழுக்களாக சோதனை மேற்கொண்டனர்.

அதில், தற்போது வரை கள ஆய்வின்போது 108 பெட்டிக் கடைகளில், சுமார் 87.516 கிலோ தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருளான பான் மசாலா மற்றும் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்காவின் சந்தை மதிப்பு சுமார் 87 ஆயிரத்து 500 ரூபாய் என கூறப்படுகிறது.

மேலும், கள ஆய்வின் முடிவில் முதல் முறை குற்றம் புரிந்த 106 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான பான் மசாலா மற்றும் குட்கா ஆகியவற்றை விற்பனை செய்த 106 கடைகளுக்கு, முதல் முறை குற்றம் புரிந்ததற்கு அபராதமாக 5 ஆயிரம் வீதம் மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது முறையாக குற்றம் புரிந்த சூலூர் வட்டாரப் பகுதியில் ஒரு கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் மூன்றாவது முறையாக குற்றம் புரிந்ததற்காக மலுமிச்சம்பட்டி பகுதியில் 1 கடை மூடப்பட்டு, அபராதமாக 25 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டு, அக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை கோவை முழுவதும் மொத்தமாக 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு தனிக் குழுவான காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையுடன் ஆய்வு மேற்கொள்ளும்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்த கடை மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் ரோபோக்கள், மோப்ப நாய்களுடன் திடீர் வெடிகுண்டு சோதனை.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details