தமிழ்நாடு

tamil nadu

பொங்கல் பண்டிகை; கோவையில் பூ, காய்கறிகள் விலை அதிரடி உயர்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 2:01 PM IST

Kovai flower market: பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, கோயம்புத்தூரில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

Etv Bharatகோவையில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு
கோவையில் பூக்கள் மற்றும் காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு

கோயம்புத்தூர்:தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, நாளை மறுநாள் (ஜன.15) கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் வியாபாரம் களைகட்டத் துவங்கியுள்ளது. பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும், ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பண்டிகைக்காக பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

பூக்களின் விலை:

பூக்கள் கடந்தவாரம் பூக்களின் விலை தற்போது பூக்களின் விலை
மல்லிகைப் பூ ரூ.800 ரூ.2200
முல்லைப் பூ ரூ.600 ரூ.1200
ஜாதிப் பூ ரூ.400 ரூ.800
செவ்வந்தி ரூ.80 ரூ.140
அரளி ரூ.160 ரூ. 280
ரோஸ் ரூ.120 ரூ.200
செண்டுமல்லி ரூ.40 ரூ.80
தாமரை ரூ.10 ரூ.20
சம்மங்கி ரூ.40 ரூ.180
துளசி ரூ.20 ரூ.50

பூ விலை பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் பூக்களை குறைவாகவும், மல்லிகைப் பூ வாங்குவதை தவிர்த்து, வேறு பூக்களையும் வாங்கிச் செல்கின்றனர்.

காய்கறி விலை உயர்வு:பொங்கலைமுன்னிட்டு, கோவை உக்கடம் ராமர் கோவில் வீதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான சில்லறை காய்கறி மார்க்கெட்டில், இன்று காலை ஏராளமான பொதுமக்கள் குவிந்து, தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், காய்கறிகளின் விலையும் ரூ.10 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.

காய்கறி கடந்தவாரம் காய்கறி விலை தற்போது காய்கறி விலை
கேரட் ரூ.40 ரூ.50
பீன்ஸ் ரூ.50 ரூ.60
முருங்கக்காய் ரூ.120 ரூ.140
இஞ்சி ரூ.100 ரூ.120
பூண்டு ரூ.250 ரூ.300
அவரைக்காய் ரூ.50 ரூ.70
மொச்சை ரூ.50 ரூ.80

பொங்கல் பண்டிகைக்கு காய்கறிகள் பிரதானம் என்பதால், விலை சற்று உயர்வாக இருந்தாலும், பொதுமக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

காவல்துறை பாதுகாப்பு: பண்டிகையை முன்னிட்டு, பூ மார்க்கெட்டிற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை புரிவதால், காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் நிறுத்தம்? - இருக்கும் சலுகைகளை திமுக பறிப்பதாக ஓபிஎஸ் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details