தமிழ்நாடு

tamil nadu

கோவையில் பெய்த கனமழை: சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்

By

Published : May 17, 2020, 7:45 PM IST

கோவை: சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக டவுன் ஹால் சிக்னலில் உள்ள மின் கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்தும் மின்சாரமும் தடைப்பட்டது.

கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இன்று மதியம் முதல் கோவையில் கணுவாய், துடியலூர், காந்திபுரம், பேரூர், உக்கடம் போன்ற பகுதிகளில் சூரைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கோவை டவுன் ஹால் சிக்னலில் உள்ள மின் கம்பம் ஒன்று சாய்ந்தது. இதையடுத்து அங்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதேபோல் உக்கடம் குளத்தைச் சுற்றி கம்பியால் போடப்பட்டிருக்கும் தடுப்பும் கீழே சாய்ந்தது.

சாய்ந்து விழுந்த தடுப்பு

பவர் ஹவுஸ் பகுதியில் சாலையோர மரம் ஒன்று சாய்ந்ததில் சாலை ஓரங்களில் நிற்க வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. அதே போல் லாரி பேட்டையில் நாளை முதல் காய்கறி சந்தைகள் நடத்த போடப்பட்டிருந்த கூடங்களும் விழுந்தன. சுந்தராபுரத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் மரம் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்தும் மின்சாரமும் தடைப்பட்டது.

சாலையில் மரங்கள் விழந்து சேதம்

புயல் உருவாகியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாலும் ஊரடங்கில் மக்கள் பலரும் வீட்டில் இருப்பதாலும் சாய்ந்த மின் கம்பங்கள் போன்றவற்றால் உயிர் சேதம் எதுவும் இல்லாமல் தடுக்கப்பட்டது.

கனமழையால் சேதம்

இதையும் படிங்க... தூத்துக்குடி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

ABOUT THE AUTHOR

...view details