தமிழ்நாடு

tamil nadu

கோவையில் தனியார் கல்லூரியின் சுவர் இடிந்துவிழுந்து நால்வர் பலி!

By

Published : Jul 4, 2023, 7:25 PM IST

Updated : Jul 4, 2023, 8:13 PM IST

கோவையில் தனியார் கல்லூரியின் சுவர் இடிந்துவிழுந்து, நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Coimbatores private colleges perimeter wall collapsed died four
Coimbatores private colleges perimeter wall collapsed died four

கோவையில் தனியார் கல்லூரியின் சுவர் இடிந்துவிழுந்து நால்வர் பலி!

கோவை:கோவை புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் சுவர் இடிந்து 4 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பாலக்காடு சாலையில் குனியமுத்தூர் அடுத்த கோவைபுதூர் பிரிவில் தனியார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியினை சுற்றி பிரமாண்ட சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாலை கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் 6 பேர் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்புப் பணி மேற்கொண்டதுடன், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு தொழிலாளர்களை காயங்களுடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இடிபாடுகளில் சிக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

உயிரிழந்த தொழிலாளர்கள் கண்ணையன், ஜெகநாதன், சச்சிம் ஆகியோர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பிபில் போயால் என்னும் தொழிலாளர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Last Updated : Jul 4, 2023, 8:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details