தமிழ்நாடு

tamil nadu

கோவை To ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில்: அக்டோபர் வரை நீட்டிப்பு!

By

Published : Aug 2, 2022, 8:19 PM IST

Updated : Aug 2, 2022, 8:34 PM IST

கோவை டூ ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் வரை நீட்டிப்பு..!
கோவை டூ ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் வரை நீட்டிப்பு..! ()

கோவை To ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 3ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை முதல் ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட இரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'கோவை முதல் மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள், பாலக்காடு, சொர்ணூர், மங்களூரு வழியாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில்கள் அக்டோபார் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

அதன்படி, ஜபல்பூர் முதல் கோவை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02198), வரும் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைதோறும் ஜபல்பூரிலிருந்து புறப்பட்டு, கோவை வந்தடையும்.

இதேபோல, கோவை முதல் ஜபல்பூர் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:02197), வரும் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் கோவையிலிருந்து ஜபல்பூர் புறப்பட்டுச்செல்லும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கோவையில் விருது வாங்கி தருவதாக கூறி 15 லட்சம் மோசடி செய்தவர் கைது

Last Updated :Aug 2, 2022, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details