தமிழ்நாடு

tamil nadu

கோவை சிறுவன் 'ஜூனியர் மாடல்' நிகழ்ச்சிக்குத் தேர்வு

By

Published : Nov 22, 2021, 6:15 AM IST

துபாயில் நடைபெறவுள்ள பன்னாட்டு ஜூனியர் மாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ள கோவையைச் சேர்ந்த ஆறு வயது சிறுவனுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ஜூனியர் மாடல் நிகழ்ச்சிக்கு தேர்வான கோவை சிறுவன் தொடர்பான காணொலி
ஜூனியர் மாடல் நிகழ்ச்சிக்கு தேர்வான கோவை சிறுவன் தொடர்பான காணொலி

கோவை: கோவையின் ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார்-கோமதி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ராணா சிவக்குமார் (6) என்னும் மகன் உள்ளார். இவர் துபாயில் நடைபெறவுள்ள 'ஜூனியர் மாடல்' பன்னாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார்.

தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்புப் பயிலும் சிறுவன், ஆன்லைன் மூலம் நடைபெற்ற தகுதிப் போட்டியில் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னரே சிறுவன் ராணா பல போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார்.

ஜூனியர் மாடல் நிகழ்ச்சிக்குத் தேர்வான கோவை சிறுவன் காணொலி

இவர் சென்னை பேஷன் கான்டெஸ்ட் 2021 - ஸ்டைலிஸ் கிட், ரைசிங் ஸ்டார் ஆஃப் இந்தியா 2020 - டைட்டில் வின்னர், சென்னை பேஷன் கான்டெஸ்ட் 2019 - க்யூட்டெஸ்ட் கிட், மாஸ்டன் அண்ட் மிஸ்கிட் சேலம் 2019 - ஸ்டைலிஸ் கிட், ரைசிங் ஸ்டார் ஆஃப் இந்தியா 2019 - போட்டோஜெனிக் கிட் உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பன்னாட்டுப் போட்டிக்குத் தேர்வானது குறித்து சிறுவன் ராணா சிவக்குமார் பேசுகையில், "எனக்கு மூன்று வயதில் இருந்தே இத்துறையில் ஆர்வம் உள்ளது. இந்தியாவுக்காகப் பன்னாட்டுப் போட்டியில் தேர்வானது மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது" என்றார்.

இதையும் படிங்க:அமெரிக்காவில் பண மழை... வெள்ளிக்கிழமை அதிகாலை கண்ணை திறந்த லட்சுமி!

ABOUT THE AUTHOR

...view details