தமிழ்நாடு

tamil nadu

பள்ளி மாணவியை திருமணம் செய்ய அழைத்து சென்ற இளைஞர் போக்சோவில் கைது

By

Published : May 29, 2022, 9:44 PM IST

பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவியை திருமணம் செய்ய அழைத்து சென்ற இளைஞர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை திருமணம் செய்ய அழைத்து சென்ற இளைஞர் போக்சோவில் கைது

சென்னை: அரும்பாக்கம் அருகேவுள்ள சேத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தவர் 17 வயது சிறுமி. இவரும், அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (20) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 21ஆம் தேதி மாணவி பள்ளிக்குச் சென்றபோது மாணவியை பிரவீன் அழைத்துச் சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று (மே 29) காலை பிரவீன் மற்றும் 17 வயது மாணவி ஆகியோர் வழக்கறிஞர் மூலமாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு வந்தனர். இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய கோயம்பேடு காவல் துறையினர், அவர்களை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், பிரவீன் பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மதுராந்தகத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பிரவீன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 17 வயது பள்ளி மாணவியை சென்னையிலுள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:4 ம் வகுப்பு மாணவன் பலாத்காரம் செய்ததாக சக மாணவி புகார்..!

ABOUT THE AUTHOR

...view details