ETV Bharat / bharat

4 ம் வகுப்பு மாணவன் பலாத்காரம் செய்ததாக சக மாணவி புகார்..!

author img

By

Published : May 29, 2022, 11:56 AM IST

புகாரின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் குற்றவாளிகள் சிறுமியை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அமைதியாக இருக்குமாறு மிரட்டியுள்ளனர்.

சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி
சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நான்காம் வகுப்பு மாணவி

ஜோத்பூர்: நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது வகுப்பு மாணவரால் பாலியல் வன்கொடுமை செய்து, யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது, அவர் இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இச்சம்பவம் ஜோத்பூரில் உள்ள மாதா கா தான் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் நந்துள்ளது. புகாரின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் குற்றவாளிகள் சிறுமியை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர்.

இதை உறுதிப்படுத்திய காவல் உதவி ஆணையர் நிஷாந்த் பரத்வாஜ், "போக்சோ சட்டம் மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. குற்றப்புலனாய்வு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.", என தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதம், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பள்ளியின் நடன ஆசிரியர் மீது மற்றொரு புகாரைப் பதிவு செய்தார். அப்போது, சிறுமிக்கு நான்கு வயது ஆனால் அந்த சிறுமி மார்ச் 2022 இல் தான் அவரது தாயாரிடம் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட நடன ஆசிரியரான நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குழந்தைக்கு நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் பற்றி கற்றுக்கொடுத்த பொழுது தான் இந்த சம்பவங்கள் குறித்து அந்த சிறுமி தன் தாயாரிடம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு ரூபாய்க்கு 10 சானிட்டரி நாப்கின்கள் - மகாராஷ்டிரா அரசின் மாஸ்டர் பிளான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.