சென்னை:சென்னை பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசக் தெருவில் பெண் காவலர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்டிருந்த ஓய்வு அறைகளுடன் கூடிய கட்டிடம் நீண்ட நாட்களாகத் திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தங்கும் விடுதி கடினம் புதுபிக்கப்பட்டு இன்று (ஜன.11) திறக்கப்பட்டது.
இதனை, காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆணையர் அசரா கார்க் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து, காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது "மகளிர் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன. இதில், 57 காவலர்கள் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் காவலர்கள், வெளியூர் காவலர்கள் என அனைவரும் இந்த அறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களுக்கு வருபவர்களும் இந்த அறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவர்கள் தினமும் ரூபாய் 100 கொடுத்துத் தங்கிக் கொள்ளலாம். சென்னை வடக்கு மாவட்டம் காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதில் சமையலறை உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் வசதிகளும் உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல் படி, சென்னை பெருநகர பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டிலும், அதேபோல் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் இரவில் ரோந்து பணி மேற்கொள்ளும் போது பல்வேறு கண்காணிப்பு வழிமுறைகள் உள்ளது.