தமிழ்நாடு

tamil nadu

'ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை' - ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்

By

Published : Oct 8, 2021, 5:09 PM IST

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், கருத்துக் கேட்பு, ஆலோசனை நிலையிலேயே உள்ளதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

எல்.முருகன்
எல்.முருகன்

சென்னை:அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய பிலிம் சேம்பரில் ஒன்றிய தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள், பிலிம் சேம்பர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதில் ஜிஎஸ்டி, சினிமா பைரசி, கேளிக்கை வரி, ஒளிப்பதிவு சட்ட மசோதா உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிலிம் சேம்பர் நிர்வாகிகள் எல்.முருகனிடம் முன்வைத்தனர். மேலும் தங்கள் பிரச்னைகள் குறித்த மனுக்களையும் வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “மத்திய இணை அமைச்சரான பிறகு சென்னை ஊடகத்தினரை முதன்முறையாக சந்திக்கிறேன். தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட வர்த்தக மையத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

சினிமா தொடர்பான அனுமதியை ஒரே இடத்தில் பெறுவதற்கு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்வே, பாதுகாப்பு என அனைத்து துறை அனுமதியையும் இந்த இணையதளம் மூலம் பெற முடியும்.

திரைத்துறை சார்ந்த புதிய விஷயங்களை இன்று தெரிந்து கொண்டேன். தணிக்கைக் குழுவில் திரைத்துறையினர் ஏற்கனவே இடம்பெற்றுள்ளனர். ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கருத்துக் கேட்பு, ஆலோசனை நிலையிலேயே அது உள்ளது” என்றார்.

இதையும் படிங்க:கட்டப்பையில் வைத்து பெண் குழந்தை கடத்தல் - சிசிடிவியை வைத்து விசாரணை

ABOUT THE AUTHOR

...view details