தமிழ்நாடு

tamil nadu

கல்லூரிகளில் எம்பில் படிப்பில் மாணவர்களை சேர்க்கக் கூடாது - யுஜிசி எச்சரிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2023, 5:36 PM IST

Mphil courses: எம்பில் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் இல்லை என்பதால், நடப்பு கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் எம்பில் படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கக் கூடாது என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை
கல்லூரிகளில் எம்பில் படிப்பில் மாணவர்களை சேர்க்க கூடாது

சென்னை:முன்னதாக பெரும்பாலான மாணவா்கள் இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்த பின்னர், எம்பில் படிப்பை தோ்வு செய்து படித்து வந்தனர். இந்நிலையில், எம்பில் படிப்பு தகுதியானது இல்லை எனக் கூறி 2022-2023ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு அதனை நீக்கியது.

இந்நிலையில், தற்போது வரை சில கல்லூரிகள் எம்பில் படிப்பை வழங்கி வருவதாக எழுந்த புகாரின் பேரில், பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு? - மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் மனிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “சில பல்கலைக்கழகங்கள் எம்பில் படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்கி, மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு தகவல் வந்துள்ளது.

எம்பில் படிப்பானது அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல. 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, எம்.பில் படிப்புகளுக்கு எந்த பல்கலைக்கழகமும் மாணவர்களை சேர்க்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், 2023-2024ஆம் கல்வியாண்டுக்கான எம்பில் படிப்பு சேர்க்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்!

ABOUT THE AUTHOR

...view details