தமிழ்நாடு

tamil nadu

போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு.. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்த 'Triathlon 2023'

By

Published : Apr 15, 2023, 10:56 AM IST

போதையில்லா தமிழ்நாடு மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் டிரையத்லான்(Triathlon) என்னும் மூன்று வகையான விளையாட்டு போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Etv Bharat டிரையத்லான் போட்டி
Etv Bharat டிரையத்லான் போட்டி

டிரையத்லான் போட்டி

சென்னை:போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம், நடிகர் தலைவாசல் விஜய் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆவடி காவல் ஆணையரகம் ஏற்பாட்டில் போதை இல்லா தமிழ்நாடு உருவாக்குவதற்காக நீச்சல், சைக்ளிங், ஒட்டப்பந்தயம் ஆகிய டிரையத்லான் நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 500 பேர் பதிவு செய்துள்ளனர். ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் தனித்தனியே போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் ஜூனியர் (16 மற்றும் 17), சீனியர் (18+), மற்றும் முதுநிலை (40+) ஆகிய 3 வயது பிரிவுகள் உள்ளன. 3 வயதுப் பிரிவினரும் தூரம் - 750 மீ நீச்சல், 20 கி.மீ., சைக்கிள் மற்றும் 4 கி.மீ., ஓட்டம் ஆகியவற்றில் போட்டியிட்டனர். 18 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 500+ உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் இந்தியா CWG 2022, ஆசியக் கோப்பை போன்றவற்றில் கலந்து கொண்ட வீரர்களும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஜப்பானில் நடைபெரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

விளையாட்டு போட்டிக்கான டிஷர்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிமுகப்படுத்தினார்‌. மேலும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்காக பதிவு செய்யப்பட்டவர்களில் இருந்து பெறப்பட்ட கட்டண தொகை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 200 ரூபாயை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வழங்கினர்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சட்டப்பேரவையில் விளையாட்டு துறை சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நேற்று முதலே செயல்படுத்த தொடங்கி விட்டோம். தமிழ்நாட்டில் அதிக அளவில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வீரர்களை தயார் படுத்த முயற்சி எடுத்து வருகிறோம். நீண்ட கால திட்டம் மற்றும் தொடர் முயற்சியோடு செயல்படுவோம்” என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, “தமிழ்நாட்டு காவல் துறைக்கும் விளையாட்டு துறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டியில் எல்லா மாநிலங்களுக்கும் இடையிலான போட்டியிலும் தமிழ்நாடு தான் முதலிடம் வந்துள்ளது.

ஆயிர கணக்கான இளைஞர்கள் சைக்கிள் ஓட்ட தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்த இந்த விளையாட்டுகள் உதவும். போதையில்லா தமிழ்நாடு எனும் திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஐந்து முறை கூட்டம் நடத்தியுள்ளார்.

இதில், 22 ஆயிரம் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது கிடையாது. பெருமளவில் போதை பழக்கம் தமிழ்நாட்டில் குறைந்துள்ளது” என தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு

இதையும் படிங்க:சீட் ஒதுக்கப்படாத அதிருப்தி: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமான மாஜி துணை CM!

ABOUT THE AUTHOR

...view details