தமிழ்நாடு

tamil nadu

அதிமுக நிர்வாகிகள் இருவர் நீக்கம் - ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

By

Published : Jul 16, 2022, 5:11 PM IST

அதிமுக நிர்வாகிகள் இருவரை, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி, அதுதொடர்பாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள் இருவர் நீக்கம் - ஈபிஎஸ் அறிவிப்பு!
அதிமுக நிர்வாகிகள் இருவர் நீக்கம் - ஈபிஎஸ் அறிவிப்பு!

சென்னை:அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 'கட்சியின் கொள்கை - குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்களான ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட 39 பேரை நீக்கி' உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிமுக நிர்வாகிகள் இருவரை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், “அதிமுக எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச்செயலாளர் அமலன் பி.சாம்ராஜ் மற்றும் அதிமுக மருத்துவ அணி இணைச்செயலாளர் ஆதிரா நேவிஸ் பிராபகர் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர்கள் உட்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்ஸின் அடுத்தடுத்த பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details