முன்னாள் அமைச்சர்கள் உட்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்ஸின் அடுத்தடுத்த பதிலடி!

author img

By

Published : Jul 15, 2022, 4:32 PM IST

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர்கள் உட்பட 44 பேரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை: அதிமுக கட்சியின் கொள்கை - குறிக்கோள் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாலும் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும் 44 பேரை நீக்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

அதில், முன்னாள் அதிமுக அமைச்சர்களான பொள்ளாச்சி ஜெயராமன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், பென்ஜமின், மாதவரம் வி.மூர்த்தி, பி.வி.ரமணா. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.பி.அன்பழகன், கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன், எம்.பரஞ்ஜோதி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், மற்றும் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அதிமுகவின் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகிக்கும் கீர்த்திகா முனியசாமி, ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ், பாலகங்கா, வி.சோமசுந்தரம், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், அலெக்சாண்டர், எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன், கே.சி.வீரமணி, க.ரவி, தூசி கே.மோகன், கே.ஏ.பாண்டியன், அருண்மொழிதேவன், குமருகுரு, கே.அசோக்குமார், வெங்காடாஜலம், சி.மகேந்திரன் ஆகியோரும்

அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கப்பச்சி டி.வினோத், குமார், பவுன்ராஜ், பி.கே.வைரமுத்து, பி.ஆர்.செந்தில்நாதன், முனியசாமி, தச்சை என்.கணேசராஜா, செல்வமோகன்தாஸ் பாண்டியன், டி.ஜான் தங்கம் மற்றும் ஏ.அன்பழகன் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 14) ஓபிஎஸ்ஸின் மகன்களான தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் ஆகியோர் உட்பட 18 பேரை அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளதாக, எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன்கள் உட்பட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஈபிஎஸ் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.