தமிழ்நாடு

tamil nadu

காலை 9 மணி செய்தி சுருக்கம் Top Ten News @ 9 am

By

Published : Oct 24, 2021, 9:00 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top-ten-news-at-9-am
top-ten-news-at-9-am

1. திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி - தமிழ்நாடு அரசு

நவம்பர் 1ஆம் தேதி முதல் திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2. 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக 9 மாவட்டங்களுக்கான ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

3. வணிகவரித் துறைக்கு இழப்பை ஏற்படுத்தும் அலுவலர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாடு அரசுக்கு வணிக வரித்துறையில் வருவாய் இழப்பு ஏற்படுத்தும் விதமாக ஏமாற்றுபவர்களுக்கு துணையாக போகும் வணிக வரித்துறை அலுவலர்கள் யாராகினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்

4. இந்தியா 75 - ஜம்மு காஷ்மீரை காக்க உயிர் தியாகம் செய்த மக்பூல் ஷெர்வானி

எப்போதெல்லாம், பாகிஸ்தான் படையெடுப்பு தொடர்பான நினைவு காஷ்மீர் மக்களுக்கு வருகிறதோ, அப்போது பாரமுல்லாவின் மக்பூல் ஷெர்வானியும் நினைவுக்கு வருவார். இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு துணை நின்று வித்திட்டவர் மக்பூல் ஷெர்வானி.

5. தொழிலதிபர் வீட்டில் ரூ. 1.30 கோடி மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளை!

கோவையில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 1.30 கோடி மதிப்பிலான வைர நகைகள், 50 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6. கொலை வழக்கு; திமுக எம்பியின் ஜாமின் மனு தள்ளுபடி!

கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

7. தோடர் சால்வை விவகாரம்; தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை?

புவிசார் குறியீடுடைய எம்பிராய்டரிங் பூ வேலைப்பாடுடைய தோடர் சால்வைகளை தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோடர் பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

8. வாயா.. நீ என் ஏறியாவுக்கு வாயா..தப்பித்து ஓடிய கைதி!

தர்மபுரி சிறைச்சாலைக்கு கொண்டு போகும் வழியில் தப்பியோடிய கொலைக் குற்றவாளியை ஒரு மணிநேர தேடுதலுக்கு பின்னர் பிடித்த காவலர்களுக்கு பாரட்டுகள் குவியத் தொடங்கியுள்ளன.

9. கஞ்சா விற்பனை; நண்பரைக் கொலை செய்த 4 பேர் சரண்!

குன்றத்தூரில் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததால், ஆத்திரத்தில் நண்பரைக் கொலை செய்து புதைத்த 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

10. அதே சிரிப்பு.. அதே லைலா.. பிதாமகன் நாயகிக்கு வயது 41!

நடிகை லைலா இன்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details