தமிழ்நாடு

tamil nadu

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

By

Published : Oct 21, 2021, 9:19 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்.

Top ten news at 9 am  top ten  top news  top ten news  tamilnadu news  tamilnadu latest news  latest news  news update  morning news  காலை செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  காலை செய்திச் சுருக்கம்  காலை 9 மணி செய்திகள்
செய்திச் சுருக்கம்

1. ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்!

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக சேலம் ஆயுதப்படையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ., உள்பட 7 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இது தொடர்பான செய்திகள் உரிய ஆதாரத்துடன் ஈடிவி பாரத் செய்தித் தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

2. மனித உரிமை என்ற பெயரில் போலி அமைப்புகள் தொடங்கினால் நடவடிக்கை - சைலேந்திர பாபு

மனித உரிமைகள் என்ற பெயரை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

3. 'அம்மா உணவகத்துக்கு ஆபத்து; சலசலப்பை ஏற்படுத்தும் சசிகலா'- ஜெயக்குமார் பாய்ச்சல்!

அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்த சசிகலா முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அம்மா உணவகத்தை திமுக அரசு மூட நினைத்தால், அதிமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

4. திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு

திமுகவின் 100 நாள் சாதனை விலைவாசி உயர்வு தான் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

5. திருச்சி, கோவை, குமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி, கோவை, குமரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஓட்டிய 1892 வாகன ஓட்டிகள் மீது வழக்கு

அரசு நிர்ணயித்த அளவுக்கு மேல் வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் பொருத்தியதாக ஆயிரத்து 892 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

7. வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவரை காரில் கடத்திய கும்பல் கைது

ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்தவரை காரில் கடத்திச் சென்ற தம்பதி உள்பட மூவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

8. ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

9. 'யூனிக் ஐகான்'- தேங்காய் சீனிவாசன்!

திரையுலகில் தனக்கென தனி பாணியையும், ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருந்த தேங்காய் சீனிவாசனுக்கு இன்று பிறந்தநாள்

10. இளங்காத்து வீசுதே.. ஹேப்பி பர்த் டே சங்கீதா!

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சங்கீதா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details