தமிழ்நாடு

tamil nadu

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM

By

Published : Sep 5, 2021, 9:17 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 9 am  top ten  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  news updates  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  காலை 9 மணி செய்திச் சுருக்கம்  காலை செய்திகள்
செய்திச் சுருக்கம்

1. தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 575 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 575 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்யலாமா - நீதிமன்றம் ஆய்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு கட்டுபாடுகளை விதிக்க முடியுமா என ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

3. மாநகராட்சி பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை

அரசுப்பள்ளிகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என மாநகராட்சி வெளியிட்டுள்ள வருகை பதிவேடு மூலம் தெரியவந்துள்ளது.

4. மதுரை ரயில்வே பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு - தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரையில் உள்ள ரயில்வே காலனியில் செயல்பட்டு வரும் ரயில்வே பள்ளி சிறந்த பள்ளியாக தெற்கு ரயில்வேயால் அறிவிக்கப்பட்டு, அப்பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

5. காசிமேட்டில் சோதனை - அழுகிய மீன்கள் அழிப்பு

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கெட்டுப்போன 50 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

6. ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலருக்கு இரண்டு ஆண்டு சிறை

தொடர்ந்து டீ கடை நடத்த அனுமதிப்பதற்கு, ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில், கோயம்பேடு மார்க்கெட் மேலாண்மை கமிட்டி நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

7. ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியது நடிகர் ஆர்யா இல்லை!

ஜெர்மனியில் குடியேறிய பெண் அளித்த புகாரின் அடிப்படையிலேயே ஆர்யா அவரது தாயார் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. ஆர்யாவிற்கு இதில் தொடர்பில்லை என தெரிந்த பிறகு அவரது பெயர் நீகக்கப்பட்டது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

8. தலைவி அரசியல் படம் இல்லை - விஜய் விளக்கம்

தலைவி அரசியல் திரைப்படம் இல்லை; ஜெயலலிதாவின் வாழ்க்கை படம் மட்டுமே என இயக்குநர் விஜய் தெரிவித்துள்ளார்.

9. இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி!

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் தொடரில் பேட்மிட்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர் சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

10. பார்டர் திரைப்படம் தடை கோரி வழக்கு - படக்குழுவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் "பார்டர்" படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர், தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details