தமிழ்நாடு

tamil nadu

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

By

Published : Aug 28, 2021, 7:03 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

(1) இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விக்ரஹா ரோந்துக் கப்பல்!

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ’விக்ரஹா’ எனும் நவீன ரோந்துக் கப்பல் சேவையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.

(2) மூன்று மாதங்களில் பிரஸ் கவுன்சில் -தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

போலி பத்திரிகையாளர்களை களைய ஏதுவாக, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(3) மாதவரம் பால் பண்ணையில் கையாளும் திறனை அதிகரிக்க நடவடிக்கை

பால்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், ”113.75 கோடி ரூபாய் மூலம் மாதவரம் பால் பண்ணையில் கையாளும் திறனை நாளொன்றுக்கு 10 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(4) வேளாண் துறை சார்ந்த 25 புதிய அறிவிப்புகள் பேரவையில் வெளியீடு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை உற்பத்தி திறனை அதிகரிக்க உள்கட்டமைப்பு வசதிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த 25 புதிய அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

(5) 'வாழ்க்கையில் பல பிரச்சினைகளை பார்த்துள்ளேன்' - நடிகை வனிதா

வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் பார்த்துள்ளேன், நிறைய போராடியுள்ளேன் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

(6) கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் - அமைச்சர் தகவல்

அரசு மற்றும் தனியார் பங்களிப்பில், ரூ. 50 கோடி செலவில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்படும் என, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

(7) தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(8) ‘வேளாண் சட்டப் போராட்ட வழக்குகள் ரத்து’ - முதலமைச்சர்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

(9) ’மகாராஷ்டிரா முதலமைச்சரை மரியாதைக் குறைவாக பேசியது ஏற்கதக்கதல்ல’

மகாராஷ்டிரா முதலமைச்சர் குறித்து ஒன்றிய அமைச்சர் மரியாதைக் குறைவாக பேசியது ஏற்கதக்கதல்ல என அம்மாநில கல்வி அமைச்சர் வர்ஷா கெயிக்வாட் நெல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

(10) தொழிலதிபர் கடத்தலுக்கு உதவிய திருமங்கலம் உதவி ஆணையர், ஆய்வாளர் ஹைதராபாத்தில் பதுங்கல்

தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர், ஹைதராபாத்தில் இருப்பதாக சிபிசிஐடி காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details