ETV Bharat / state

கொளத்தூரில் ரூ.50 கோடியில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் - அமைச்சர் தகவல்

author img

By

Published : Aug 28, 2021, 4:35 PM IST

அரசு மற்றும் தனியார் பங்களிப்பில், ரூ. 50 கோடி செலவில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்படும் என, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கலைவாணர் அரங்கம்
கலைவாணர் அரங்கம்

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, வேளாண்மை, கால்நடை மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவளம் மற்றும் மீனவர் நலன் சார்ந்து 28 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. சென்னை கொளத்தூரில் முக்கிய தொழிலாக விளங்கி வரும் வண்ணமீன்கள் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், அந்தத் தொழிலைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கிலும் ரூ.50 கோடி செலவில், சர்வதேச தரத்தில், அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் வண்ணமீன்கள் வர்த்தக மையம் அமைக்கப்படும்.

2. பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு, ரூ. 9 கோடியே 60 லட்சம் மானியத்தில், 2 ஆயிரம் வெளிப்பொருத்தும் உள்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கப்படும்.

3. விசைப்படகுகளுக்கு மின்னணு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் திட்டம், ரூ.30 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

4. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தி சீரமைக்கப்படும்.

5. உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்கிடும் வகையில், 100 பண்ணைக் குட்டைகளில் மீன்கள் வளர்ப்பதற்கு இடுபொருள் மானியமாக ரூ 30 லட்சம் வழங்கப்படும்.

6. கடலூர் மாவட்டத்தில், ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில், விலை மதிப்புமிக்க நாட்டு இன விரால் மீன் குஞ்சு உற்பத்தி பண்ணை அமைக்கப்படும்.

7. செங்கல்பட்டு மாவட்டம் பாலமேடு, கடலூர் மாவட்டங்களில் பெரியகுப்பம், சின்ன குப்பம் ஆளிக்குப்பம் ஆகிய இடங்களில், ரூ. 39 கோடி செலவில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

8. தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் உள்ள மீன்பிடி இறங்குதளம், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

9. விழுப்புரம் மாவட்டம் இயக்கி ஆர் குப்பம் மீன்பிடி இறங்கு தளத்தின் மேம்பாட்டு பணிகள் மற்றும் அனுமந்தை கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

10. தூத்துக்குடி மாவட்டம், அமலிநகர், ஜீவா நகர், ஆலந்தலை மீனவர் காலனி, குலசேகரப்பட்டணம் கடலோர கிராமங்களில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்படும்

11. செங்கல்பட்டு மாவட்டம் பழைய குப்பம், புது நடுகுப்பம், அங்காளம்மன் குப்பம், செம்மஞ்சேரி குப்பம் மற்றும் கரிகட்டு குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் மொத்தமாக ரூ. 57 கோடி செலவில் மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்படும்

12. தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மற்றும் வீரபாண்டியன்பட்டணம் கடலோர கிராமங்களில், ரூ. 14 கோடி செலவில் மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்படும்

13. கடலூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாறு முகத்துவாரம் நிலைப்படுத்தும் பணி ரூ. 30 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

14. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மீன் வளத்திற்கான மின்னணு விரிவாக்க மையம், ரூ.1 கோடியே 6 லட்சம் செலவில் நிறுவப்படும்

15. தமிழ்நாட்டில் மீன் உற்பத்தியை அதிகரிக்க ஒருங்கிணைந்த மீன் நோய் கண்காணிப்பு மேற்பார்வை மற்றும் மீன் குஞ்சுகளின் தர மதிப்பீட்டினை மேற்கொள்ளும் அமைப்பு ரூ. 1 கோடியே 30 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்

16. செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு மீன் வளர்ப்பு தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தில் கொடுவா மீன் தீவனம் மற்றும் சிறந்த பண்ணை மேலாண்மை முறைகள் ரூ. 80 லட்சம் செலவில் உருவாக்கப்படும்

17. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி இயக்குனரகத்தில், கடலில் மீனவர் பாதுகாப்பிற்கான பயிற்சி வசதிகள் ரூ 1 ஒரு கோடியே 20 லட்சம் செலவில் நிறுவப்படும்.

18. உள்நாட்டு மீன்வளர்ப்பு திறன் மேம்பாட்டிற்காக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஒருங்கிணைந்த செயல் விளக்க மீன் பண்ணை வளாகம், ரூ. 3 கோடியே 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

19. தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்திற்கு தூத்துக்குடியில் திட்ட அலுவலகம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் வானவெளியில் டீசல் விற்பனை நிலையம் ஆகிய வசதிகள் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

20 தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் மூலம், மாநிலத்தில் 10 இடங்களில் மீனவ மகளிருக்கு முன்னுரிமை அளித்திடும் வகையில் மீன் விற்பனை அங்காடிகள் ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்

21. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பாலாறு-பொருந்தலாறு அணை மீன் விற்பனை மையங்கள், பழையாறு அக்கரைபேட்டை கோடியக்கரை பூம்புகார் கடலூர் - 2 மல்லிப்பட்டினம் மற்றும் குந்துகள் பழையாறு மீன்பிடி இறங்கு தளம் டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.

அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியாறு நீர்த்தேக்கம் மீன் உணவகம், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் வண்ண மீன் இனவிருத்தி மையம் சென்னை சேத்துப்பட்டு பசுமை பூங்கா மீன் காட்சியகம் பொருட்கள் விற்பனை மையம் ஆகியவைகளில் ரூ. 2 கோடியே 40 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

22. கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை கிராமத்தில் கடல் அரிப்பு தடுப்பு பணிக்காக கூடுதல் நேர்கல் சுவர், ரூ. 22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

23. செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கிராமத்தில், கிழக்குப் பகுதியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படும்.

24. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் சிப்பிகுளம் மற்றும் கீழ் வைப்பார் கிராமங்களில் உள்ள மீன் இறங்கு தளங்கள் ரூ. 38 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

25. கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் புதுக்குப்பம் மற்றும் சி. புதுப்பேட்டை ஆகிய கடலோர கிராமங்களில் ரூ.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடல் அரிப்பு தடுப்பு சுவர்களுடன் கூடிய புதிய மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

இவை அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்புகள் ஆகும்.

இதையும் படிங்க: ’நேரத்தின் அருமையை உணருங்கள்...’ - 2ஆவது நாளாக எச்சரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.