தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm

By

Published : Sep 29, 2020, 3:11 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3 pm
Top 10 news @ 3 pm

தமிழ்நாட்டில் இப்போது இடைத்தேர்தல் இல்லை

தமிழ்நாட்டில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் நடத்துவதில் பெரும் சிக்கல்கள் இருப்பதாக பல்வேறு மாநில தலைமைச் செயலாளர்கள் கடிதம் எழுதியுள்ளதால், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தொடரும் தடை... வருவாய் இன்றி தவிக்கும் மக்கள்!

தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்வதால், சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்துவந்த தனுஷ்கோடி மக்களின் அவல நிலை குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித்தொகுப்பு...

'பரிவாகன்' இணையதளப் பயன்பாடு பொதுமக்களுக்கு எளிதாக உள்ளதா?'

'பரிவாகன்' இணையதளப் பயன்பாடு பொதுமக்களுக்கு எளிதாக உள்ளதா? என்பது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு

சேகர் ரெட்டி வழக்கை முடித்து வைத்த சிபிஐ நீதிமன்றம்

சட்டவிரோதமாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாத வழக்கை முடித்து சிபிஐ நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

நெருக்கமான காட்சிகள் சரியாக அமைய இது தேவை: 'சின்ன ஐஸ்வர்யாராய்'

திரையில் நெருக்கமான காட்சிகள் சரியாக அமைய படப்பிடிப்பில் வசதியான சூழ்நிலை முக்கியம் என நடிகை சினேகா உல்லால் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் ரஜினிகாந்த்? - அர்ஜூன் சம்பத் கணிப்பு

நடிகர் ரஜினிகாந்த் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் பைன் செட்டியா மலர்கள்!

கொடைக்கானலில் இரண்டாவது சீசனை வரவேற்கும் விதமாக பைன் செட்டியா மலர்கள் பூத்து குலுங்கத் தொடங்கியுள்ளன.

பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வலியுறுத்தல்!

டெல்லியில் ஆம் ஆத்மி அரசு செய்தது போல் தமிழ்நாட்டிலும் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

வதோதராவில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விபத்து - 3 பேர் பலி

புதிதாக கட்டப்பட்டுவரும் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details