தமிழ்நாடு

tamil nadu

கடந்த 500 நாட்களாக விலையில் மாற்றமின்றி பயணிக்கும் பெட்ரோல், டீசல் - காரணம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 2:14 PM IST

Today petrol diesel price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 88 டாலராக இருந்தாலும், சென்னையில் 500வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யபட்டு வருகிறது.

Today petrol diesel price
கடந்த 500 நாட்களாக விலையில் மாற்றமின்றி பயணிக்கும் பெட்ரோல், டீசல்

சென்னை:சென்னையில் 500வது நாளாக தொடர்ந்து ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை நீடிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், விலையில் மாற்றமின்றி சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை என்பது சர்வதேச பொருளாதரத்தின் அடிப்படையிலும், உலக நிகழ்வுகளை பொறுத்து, கச்சா எண்ணெய் விலையில் சர்வதேச சந்தையில் நிர்ணயம் செய்யப்பட்டாலும், அதன் நிலவரத்தைப் பொறுத்து எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன.

இதன் உச்சமாக கடந்த 2021ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ100-ஐத் தாண்டி விற்பனையானது. பின்னர், 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டன.

அதன் பின்னர், உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையில் உள்ள கலால் வரியின் ஒரு பகுதியை மத்திய அரசு 2 முறை குறைத்தது. கடந்த ஆண்டு மே மாதம் கலால் வரியில் ரூ.9.50 எனவும், டீசல் விலையில் ரூ.7 என குறைத்தது மத்திய அரசு. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த 500 நாட்களாக அதே விலையில் நீடித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கும் விற்பனையாகி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? ரஷ்யா, உக்ரைன் விவகாரத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில், கச்சா எண்ணெய் விலை 113 டாலராக இருந்தது. அதைத் தொடர்ந்து, 1 வருடத்தில் உலக அரசியல் பிரச்னைகள் நிலைக்கு வந்தவுடன், இந்த ஆண்டு கச்சா எண்ணெய் 63 டாலராக இருந்து வருகிறது. கடந்த ஓராண்டாக கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கும் கீழ் உள்ளது.

இன்று (அக்.03) கச்சா எண்ணெய், 88.41 டாலராக இருந்து வருகிறது (12.30 மணி நிலவரத்தில்). ஆனாலும் இந்தியாவில், ஏன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பது பலரது கேள்வியாக இருந்து வருகிறது. மேலும், இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. அதனால் போக்குவரத்து சொந்த வாகனங்களில் செல்வதற்கு பெட்ரோல் மற்றும் டீசல் தேவையானது இருக்கிறது. மேலும், தேவை இருக்கும் இடத்தில்தான் விலையும் அதிகரித்து வருகிறது என்கிறார்கள் சில பொருளாதார நிபுணர்கள்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: தற்போது நடப்பாண்டு மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் என தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேஷம், சட்டீஸ்கர், மிசோரம் என ஐந்து மாநில தேர்தலை ஓட்டியும், 2024- நாடளுமன்றத் தேர்தலையும் குறிவைத்து, அதிரடியாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கபடுமா என்பதும் பொருளாதார மற்றும் அரசியல் வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது” - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details