தமிழ்நாடு

tamil nadu

மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு - அரசாணை வெளியீடு

By

Published : Nov 18, 2021, 11:46 AM IST

மயான பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மயான பணியாளர்கள்
மயான பணியாளர்கள்

கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "ஒன்றிய அரசு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்குவதற்காக காவல் துறைப் பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர் காவல் படை வீரர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கரோனா பணியில் ஈடுபடும் நகராட்சி, வருவாய் ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுவருகின்றனர்.

அதேபோல ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் உன்னதப் பணியை அங்கீகரிக்கும் வகையில், அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.

ஒன்றிய அரசின் அறிவிப்பின்படி மயான பணியாளர்கள், முன்களப் பணியாளர்களின் பட்டியலில் இல்லாவிடினும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும்போது, மயான பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிவரும் ஊரக வளர்ச்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான வன நிறுவனங்களில் வணிக ஆய்வு - அரசாணை வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details