ETV Bharat / state

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான வன நிறுவனங்களில் வணிக ஆய்வு - அரசாணை வெளியீடு

author img

By

Published : Nov 16, 2021, 12:44 PM IST

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தேயிலை உற்பத்திக் கழகம், ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்டம் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த, வணிக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு
அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனங்களான அரசு தேயிலை உற்பத்திக் கழகம் (டான்டீ - Tan Tea), அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்டம் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் சுற்றுச்சூழல், வனத் துறை கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன.

தேயிலை கழகம், ரப்பர் கழகம் ஆகிய நிறுவனங்கள் கடுமையான இழப்பைச் சந்தித்துவருகின்றன. ஆட்கள் பற்றாக்குறை, போதிய உற்பத்தியின்மை, புதிய யுக்திகளை உபயோகப்படுத்தாதது, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றன.

இந்நிலையில், இந்த நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு வணிக ரீதியான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு ஆணை (Government order) வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: Nirmala Sitharaman: 'அடுத்த வாரத்திற்குள் மாநிலங்களுக்கு ரூ. 95.082 கோடி நிதி பகிர்ந்தளிக்கப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.