தமிழ்நாடு

tamil nadu

TNSC Bank: மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் 4 புதிய கிளைகள் திறப்பு!

By

Published : Jul 11, 2023, 6:04 PM IST

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய நான்கு புதிய கிளைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வத்தார்.

மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் நான்கு புதிய கிளைகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்
மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் நான்கு புதிய கிளைகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை:தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய நான்கு புதிய கிளைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வத்தார்.

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி 1905 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 118 வருடங்களை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில், செயல்படும் அனைத்து தலைமைக் கூட்டுறவு வங்கிகளில், தொடங்கியது முதல் தொடர்ந்து இலாபத்தில் இயங்கி வரும் ஒரே வங்கி தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி ஆகும்.

இவ்வங்கி சென்னையில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் இது 47 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வங்கி 2022-2023 ம் நிதியாண்டில், 31,484 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் மேற்கொண்டு 114.78 கோடி ரூபாய் இலாபமாக ஈட்டியுள்ளது. இவ்வங்கியின் முதலீடுகள் ரூ.4,615 கோடியாகவும், வாடிக்கையாளர்களின் வைப்பீடுகள் ரூ.12,486 கோடியாகவும் உள்ளது. இவ்வங்கியில் தமிழ்நாடு அரசின் பங்கு மூலதனம் 20.26 கோடி ரூபாய் ஆகும்.

இதையும் படிங்க:புளியங்குடி எலுமிச்சை சந்தையில் விலை வீழ்ச்சி.. ஒரு பழம் 50 பைசாவிற்கு விற்பனை;விவசாயிகள் வேதனை!

வணிக வங்கிகளுக்கு நிகராக, இவ்வங்கியின் சேவைகள் அனைத்தும் கணினி வழியில் மட்டுமே நடக்கிறது. மேலும் துரிதப் பணப்பரிமாற்றச் சேவைகளான RTGS, NEFT, IMPS, UPI ஆகிய இணையவழி வங்கி சேவை, கைபேசி வழிச்சேவை, தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் என அனைத்து கணினி வழி வசதிகளையும் இவ்வங்கி பெற்றுள்ளது.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையும் வேண்டாம்.. சிகிச்சையும் வேண்டாம் - திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவடைந்ததை தொடர்ந்து, விரிவாக்கம் செய்யப்படாமலிருந்த இவ்வங்கியின் கிளைகள், கூட்டுறவு துறையின் 2023-2024 ம் ஆண்டிற்க்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, இந்திய ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் புதிய கிளைகள் அமைக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, உணவு மற்றும் நூகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மருத்துவர் ந.சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ரூ.200 கோடி பண மோசடி வழக்கு - சுகேஷின் மனைவி லீனா மரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details